ஆண்மையை நிரூபிக்க கொடிய விஷம் கொண்ட கையுறையை போட வேண்டும்: ஆண்கள் செய்யும் அதிர்ச்சி செயல்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

அமேசானிய பழங்குடியினர் தங்களது ஆண்மையை நிரூபிக்க கடைபிடிக்கும் பழக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசானிய சாடேரி-மாவெக் பழங்குடியினர் தாங்கள் வயதுக்கு வந்து ஆண்மையானவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக கைகளில் கம்பளி கையுறைகளை அணிந்து கொண்டு 10 நிமிடங்கள் நடனமாடிக் காட்டுவார்கள்.

கையுறைக்குள் கொடிய விஷமுடைய கடிக்கும் எறும்புகளை நிரப்பி அணிய வேண்டுமாம். இந்த எறும்பின் கடி தேனியின் கொடுக்கை விட 30 மடங்கு அதிக வலியை கொடுக்க கூடியது.

இந்த வலியோடு ஒவ்வொருவரும் 10 நிமிடங்கள் நடனமாடியே ஆக வேண்டுமாம். இந்த பழக்கத்தை அவர்கள் வாழ்நாளில் 20 முறை செய்து வருகிறார்கள். இப்படி செய்து காட்டினால் அவர்கள் வாலிப வயதை அடைந்து விட்டனர் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது.

இந்த எறும்புகளை அமேசானிய காடுகளில் வேட்டையாடுவதும் இவர்களின் பொழுதுபோக்காக உள்ளது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers