பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு தான் அதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்

Report Print Kavitha in வாழ்க்கை முறை

2019 ஆ‌ம் ஆ‌ண்டு பிப்ரவரி மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை பார்ப்போம்.

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிலும் தன்னிச்சையாக செயல்படவேண்டும் என்ற எண்ணங்களைக் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். பணவரத்து எதிர்பார்த்ததை போல இருக்கும்.

எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். கலைத்துறையினருக்கு எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை.

அரசியல்துறையினருக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவன் கோயிலுக்கு சென்று சிவனையும் நவகிரகத்தில் சூரியனையும் தீபம் ஏற்றி வழி படுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஏழைக்களுக்கு உதவி செய்து அதில் தான் மகிழும் எண்ணம் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண் செலவுகள் குறையும் எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும்.

வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

மேலிடத்துடன் கனிவை அணுசரிப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அரசியல்துறையினருக்கு மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.

பரிகாரம்: திங்கள்கிழமை அன்று ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடை களை நீக்கும். மன அமைதியை தரும்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

தனது உழைப்பால் உயர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணங்களைக்கொண்டு வாழ்வில் முன்னேற நினைக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும்

. முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழில் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பார்த்த அளவு வேகம் இருக்கும். பணவரத்து தாமதப்படலாம். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும்.

அரசாங்க அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கள் மனதில் தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது.

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

கண்ணியமான எண்ணத்துடனும் கனிவான பேச்சினாலும் மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது.

அரசியல்துறையினருக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று நவகிரகத்தில் ராகுவிற்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பசி என்று வந்தவர்களுக்கு தானம் தர்மம் அளித்து மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும்.

பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும்.

தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள்.

பணவரத்து கூடும். குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும்.

பெண்கள் எந்த காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக நடந்து முடியும்.

அலைச்சல் குறையும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று ஆஞ்சனேயரை வெண்ணை சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பொறுப்புகளை தனது கடமை என்ற எண்ணத்துடன் முடிக்கும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் பல நல்ல பலன்களைப் பெற போகிறீர்கள்.

திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். குருவின் பார்வையால் அனைத்து தடைகளும் அகலும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம்.

குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காக பாடுபடுவீர்கள்.

பெண்களுக்கு கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும். அரசியல்துறையினருக்கு மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை தீபம் ஏற்றி வணங்க பொருளாதார சிக்கல் தீரும். பணவரத்து கூடும். மனம் மகிழ்ச்சி உண்டாகும்.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த முடிவு எடுக்கும் பொதும் மற்றவர்களை கலந்து கொண்டு முடிவெடுக்கும் எண்ணம் கொண்ட ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் பொருள் சேர்க்கை உண்டாகும்.

விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை நீங்கும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும்.

பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க கால தாமதமாகலாம். கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும்.

அரசியல்துறையினர் தங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும்.

உழைப்பு வீண் போகாது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: விநாயகரை வியாழக்கிழமை அன்று வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும்.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிலும் நேரடியாக தலையிடாமல் மறைமுகமாக காரியங்களை சாதித்துக் கொள்ளும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். பணவரவு இருக்கும்.

குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். குழந்தைகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும்.

பெண்களுக்கு கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும்.

அரசியல்துறையினருக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனீஸ்வரபகவானை நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த ஒரு காரியத்தையும் திடமான மனதுடன் காரியங்களை செயலாற்றும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.

பெண்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று முருகனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்