7 வருடங்கள் கழித்து செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்ற அம்பானி

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு சமீபத்தில தான் தனது காதலர் ஆனந்த்துடன் திருமணம் நடந்தது.

தனது திருமணத்தின் மூலம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இஷா அம்பானி, திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக தனது குடும்பம் மற்றும் தனது பெற்றோர் தனக்கு கற்றுக்கொடுத்தவை குறித்து பேட்டியளித்துள்ளார்.

இஷா அம்பானி பகிர்ந்துகொண்டதாவது, திருமணமாகி 7 வருடங்கள் கழித்து செயற்கை கருத்தரித்தல் முறையில் நானும் எனது அண்ணனும் பிறந்தோம்.

எங்களை வளர்ப்பதில் எங்கள் தாய் அதிக கவனம் எடுத்துக்கொண்டார், தொழில் மற்றும் குழந்தை வளர்ப்பை மிகவும் சரியான முறையில் எங்களது தாய் நீதா கையாண்டார்.

சிறுவயதில் இருந்தே எனது தந்தையின் கடின உழைப்பை பார்த்து நான் வளர்ந்தேன். எவ்வாறு பணியாற்றுவது, சம்பாதித்த பணத்தை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது, பணிவு இவை மூன்றையும் எங்களது பெற்றோர் கற்றுக்கொடுத்துள்ளார்கள் என கூறியுள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்