மகளின் ஆசை: மனைவியுடன் டூயட் ஆடிய அம்பானி

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

வரும் 12-ம் தேதி முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ஆனந்த் பிரமாலுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

உதய்பூரில் 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் சங்கீத் கொண்டாட்டம் நடந்து வருகிறது.

அமெரிக்காவின் ஹிலாரி கிளின்டன் முதற்கொண்டு, திரையுலகம், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் உதய்பூர் வந்திருந்தனர்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியை கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினார். ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களும் நடனமாடினர். மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முகேஷ் அம்பானி, தமது மனைவி நீதா அம்பானியுடன் ஜப் தக் ஹை ஜான் பாடலுக்கு நடனமாடினார்.

இதைத் தொடர்ந்து முகேஷ் ஜாக்சன் அம்பானி என பெயரை மாற்றிவிட்டதாக கரன் ஜோஹர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

இரண்டாவது நாளாக ஞாயிறன்றும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. திருமணம் செய்துகொள்ளவிருக்கும் தனது மகளின் ஆசையை நிறைவேற்ற தனது மனைவியுடன் நடனம் ஆடியுள்ளார் அம்பானி.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers