15 நிமிடம் காலையில் சூரிய ஒளியில் நின்றால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

Report Print Jayapradha in வாழ்க்கை முறை

சூரிய ஒளியின் கதிர்கள் நம் மீது படுவதினால் நம் உடலுக்கு வைட்டமின் டி சத்து மற்றும் உடல் எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமான கால்சியத்தையும் அதிகரிக்கிறது.

மேலும் நம் உடலுக்கு காலை வெயில் எவ்வளவு நன்மைகளை தருகின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்.

காலையில் வெயிலில் நிற்பதால் கிடைக்கும் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தி

சூரிய கதிர்களில் இருந்து வைட்டமின் டி சத்து நமது லிப்போசைட்ஸ் என்னும் ரத்த வெள்ளையணுக்களின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

மன அமைதி

தினமும் அதிகாலையில் சூரிய ஒளி இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நடை பயிற்சி செய்வதினால் மகிழ்ச்சி ஹர்மோன்கள் உடலுக்கு அதிகரித்து அன்றைய நாள் முழுவது மன அமைதியுடன் இருக்கலாம்.

குழந்தைகள்

அதிகாலையில் பிறந்த குழந்தையை சிறிது நேரம் சூரிய வெளிச்சம் படுமாறு வைத்திருந்தால் குழந்தைகளை தாக்கும் ரிக்கெட்ஸ் எனப்படும் எலும்புருக்கி நோயை குணப்படுத்த முடியும்.

கண்பார்வை திறன்

தினமும் அதிகாலை சிறிது நேராக கண்களை மூடி சூரியனை நோக்கியவாறு அமர்ந்திருந்தாள் சூரிய ஒளியின் ஆற்றல் கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது.

இரத்த அழுத்தம்

சூரிய ஒளியின் மூலம் இரத்த நாளங்களை விரிவாக்கிஉயர் இரத்த அழுத்த பாதிப்பு, இதய கோளாறுகளைத் தடுத்து, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

சருமத்தை பராமரிக்க

தினமும் அதிகாலை வெயிலில் சிறுது நேரம் இருந்தால் முகத்தில் ஏற்படும் பிரட்சனைகளான முகப்பரு, சிரங்கு மற்றும் வியாதிகள் குணமாக்கப்படுகிறது.

செரிமான ஆற்றல்

அதிகாலை சூரிய வெளிச்சத்தில் சிறிது நேரம் நாம் அமர்ந்திருந்தால் உடல் உறுப்பு ஆற்றல்களை மேம்படுத்தி, உடல் செரிமான ஆற்றல்களை அதிகரிக்கிறது.

உடலில் கொழுப்புகள் கரைக்க

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் அதிகாலை சூரிய வெளிச்சத்தில் அமர்ந்திருந்தால் அல்லது நடை பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும்.

குறிப்பு

அதிகாலை சூரிய ஒளி என்பது காலை 9 மணி வரைதான் அதற்கு மேல் சென்றால் சூரியனின் புறஉதா கதிர்களின் தாக்கம் சருமத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

வயதானவர்கள் மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள் பகல் நேர வெயிலில் வெளியே செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்