உங்க பெயரின் முதல் எழுத்து T, R-ல் தொடங்குகிறதா? உடனே இதை படியுங்கள்

Report Print Jayapradha in வாழ்க்கை முறை

ஒருவருடைய பெயரின் முதல் எழுத்துக்கள் மற்றும் ராசிகளை வைத்து அவர்களின் குணாதிசயங்கள் மற்றும் தோற்றம் ஆகியவற்றை தெரிந்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் துலாம் ராசியாக இருந்து அவர்களின் பெயரின் முதல் எழுத்து T அல்லது R என்றால் அவர்களுக்கான குணாதியங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

முதல் எழுத்து T அல்லது R என்றால் தொடங்கினால்?
 • துலாம் ராசியில் பிறந்தவர்கள் மிகவும் நேர்மை மற்றும் அமைதியானவராகவும், தனிமையை விரும்பாதவராகவும் இருப்பார்கள். எந்த நேரமும் தன்னுடன் யாரேனும் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.
 • இது போன்று பல சுவாரஸ்யமான குணாதிசயங்கள், துலாம் ராசியில் பிறந்து, பெயரின் ஆரம்பத்தில் T அல்லது R எழுத்தைக் கொண்டவர்களுக்கு உள்ளது.
 • துலாம் ராசியில் பிறந்து, அவர்களது பெயரின் முதல் எழுத்து T அல்லது R என்ற எழுத்துக்களில் இருந்தால், அவர்கள் சமூகத்தோடு ஒன்றிணைந்து பழகும் சுபாவம் கொண்டராக இருப்பார்கள்.
 • அவர்களுக்கு நண்பர் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால் நண்பர்களை அதிகமாக கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணமும், நண்பர்களுடன் அதிகம் நேரம் செலவிடுவதையும் விரும்புவார்கள்.
 • நம்மை பார்ப்பவர்களை கவரும் விதமான தோற்றத்தை கொண்டிருக்க வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.
 • இவர்கள் மற்றவர்களுடன் அன்பானவராகவும், உற்சாகத்துடனும் பழகுவார்கள். அறிவாலியாக இருக்கும் இவர்கள், மூளைக்கு வேலை தரக்கூடிய வேலைக்களில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.
 • இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு வேலையை செய்தாலும் அதை முறையாக சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் இசைகள் மீது அதீத ஈடுபாடும், குழந்தைகளுடன் சுலபமாக பழகும் குணமும் கொண்டவர்கள்.
 • வயதில் மூத்தவர்களை மதிப்பதில் இருந்து மற்றவர்களுக்கு மரியாதை செலுத்தி பக்குவத்தோடு நடந்து கொள்ளும் குணமுடையவர்கள்.
 • துலாம் ராசியில் பிறந்து, T அல்லது R என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்டவர்கள் பெரும்பாலும், உயரமான, மெலிந்த தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.
 • வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு செல்வதை விரும்பும் இவர்கள் தன் வாழ்க்கையை சுவாரஸ்மாக கொண்டு செல்லவும், தனது துணைக்கு சிறந்த வாழ்க்கை துணையாகவும் இருக்க விரும்புவார்கள்.
 • இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். குறிப்பாக வாழ்க்கையில் எந்தவொரு சூழலிலும், சிரித்துக் கொண்டே பிரச்னையை சரி செய்வதில் வல்லவராக விளங்குவார்கள்.
 • வாழ்க்கையில் முன்னேற தேவையான பல விடயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமிக்கவராகவும், வெகுளித்தனம் மற்றும் பிறருக்கு உதவும் குணங்களை கொண்டவராக இருப்பார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்