தங்க தட்டுகள் இல்லை.... திருவிழா கொண்டாட்டம்: அம்பானி மகளின் நிச்சயதார்த்தம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதியினரின் மகள் இஷா அம்பானி- ஆனந்த் பிரமோலின் நிச்சயதார்த்தம் இத்தாலியில் சொர்க்கம் என அழைக்கப்படும் lake Como வில் நடந்துமுடிந்துள்ளது.

அம்பானி தனது மூத்த மகன் ஆகாஷின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு லண்டனில் சிறப்பு வகை உணவுகள் வரவழைக்கப்பட்டு அவை தங்க தட்டில் பரிமாறப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும், புதிய ஐம்பது ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அவர்கள் வீட்டின் ஒரு பகுதியில் அலங்காரமாக வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், மகள் இஷாவின் நிச்சயதார்த்தத்தை இந்தியாவில் நடத்தாமல் இத்தாலியில் 3 நாட்கள் மிகபிரமாண்டமாக நடத்தியுள்ளார்.

இந்த நிச்சயதார்த்தத்தில் சில முக்கியமான தகவல்கள் இதோ

John Legend - இன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அவரது இசையில் மணமக்கள் நடனம் ஆடி மகிழ்ந்துள்ளனர்.

நிச்சயதார்தத்திற்காக பாலிவுட் நட்சத்திரங்களை முதல் தர வகுப்பில் இத்தாலிக்கு அழைத்து சென்றுள்ளனர் அம்பானி குடும்பம்.

ஒரு சாதாரண நீரூற்று அல்லது மலர் அலங்காரம் போதாது. எனவே, இங்கு 'மலர் மழை' வைக்கப்பட்து. 500 மீட்டர் நீளமுள்ள நீரூற்றும் இருந்துள்ளது.

ஒரு நிச்சயதார்த்தம் போன்று நடத்தாமல் 3 நாட்கள் திருவிழா போன்று வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers