10 வயது குறைவான நபரை திருமணம் செய்யும் பிரியங்கா சோப்ரா: அவரது தங்கை கூறியது என்ன தெரியுமா?

Report Print Kabilan in வாழ்க்கை முறை

நிக் ஜோனஸ் தனது சகோதரிக்கு பொருத்தமான நபர் என்று பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரினிதி சோப்ரா தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஆகியோரது திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இதில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் முக்கிய நபராக இருந்த பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினிதி சோப்ரா கூறுகையில், ‘நாம் சிறுபிள்ளையாக இருந்தபோது மகிழ்ச்சியாக விளையாடினோம். வெட்கப்பட்டுக் கொண்டே கணவருக்கு தேனீர் கொடுப்போம் என நினைத்தோம்.

காதல் என்ற மாயாஜாலம் மீது நம்பிக்கை கொண்டிருந்ததால் ஒருநாள் சரியான நபரை தெரிவு செய்வோம் என நம்பினோம்.

இன்று அது நடந்திருக்கிறது. நிக் ஜோனஸை தவிர பிரியங்காவிற்கு வேறு யாரும் பொருத்தமானவராக இருக்க முடியாது என நினைக்கிறேன். ஒரு மனிதரைப் பற்றி முடிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன.

ஒன்று அவருடன் பயணிப்பது, மற்றொன்று அவருடன் சாப்பிடுவது. நிக் இந்த இரண்டையுமே நான் உங்களுடன் செய்திருக்கிறேன். அதனால் சொல்கிறேன் நீங்கள் என் அக்காவுக்கு மிகப் பொருத்தமானவர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்