ஐஸ்வர்யா ராய் முதல் தீபிகா வரை! அதிக சொத்துக்களை குவித்துள்ள நடிகைகளின் பட்டியல் வெளியானது

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

இந்தி பட உலகில் அதிகம் சொத்து சேர்த்துள்ள 10 நடிகைகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த பட்டியலில் தீபிகா படுகோனே முதல் இடத்தில் இருக்கிறார். இவருக்கு உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.317 கோடி. ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தி இருக்கிறார். விளம்பர படத்துக்கு ரூ.8 கோடி வாங்குகிறார்.

2–வது இடத்தில் இருக்கும் பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.285 கோடி. ஒரு படத்தில் நடிக்க ரூ.12 கோடி பெறுகிறார். விளம்பர படங்களுக்கு ரூ.5 கோடி கிடைக்கிறது. ஐஸ்வர்யாராயின் சொத்து மதிப்பு ரூ.246 கோடி. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் வாங்குகிறார்.

திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள மாதுரி தீட்சித் சொத்து மதிப்பும் ரூ.246 கோடிதான். இவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடியில் இருந்து 4 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

பிரீத்தி ஜிந்தாவுக்கு ரூ.211 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இவர் படங்களில் நடிக்காவிட்டாலும் தொழில்களில் பெரிய தொகையை முதலீடு செய்து அதில் வருமானம் பார்க்கிறார். வித்யாபாலன் சொத்து மதிப்பு ரூ.190 கோடி. இவர் ஒரு படத்துக்கு ரூ.6 கோடியில் இருந்து ரூ.7 கோடிவரை பெறுகிறார்.

அனுஷ்கா சர்மாவின் சொத்து மதிப்பு ரூ.176 கோடி. இவர் படத்தில் நடிக்க ரூ.7 கோடியில் இருந்து ரூ.9 கோடிவரை வாங்குகிறார். சோனம்கபூருக்கு ரூ.105 கோடி சொத்து உள்ளது.

இவர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.6 கோடி. சோனாக்சி சின்ஹாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.105 கோடி. படத்தில் நடிக்க ரூ.6 கோடி பெறுகிறார். கங்கனா ரணாவத் சொத்து மதிப்பு ரூ.75 கோடி. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.11 கோடி சம்பளம் பெறுகிறார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்