புகழின் உச்சியில் இருந்து நடுத்தெருவிற்கு வந்து இறந்துபோன பிரபல நட்சத்திரங்கள்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

பிரபல நட்சத்திரங்களாக இருந்தபோது பணம் சம்பாதித்து வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள், தங்களது வாழ்க்கையின் இறுதி நாட்களில் மிகவும் மோசமான நிலையில் அனாதையாக இறந்துபோனார்கள்,

அப்படி, புகழின் உச்சியில் இருந்து, பின் மோசமான நிலையில் இறந்த 3 நட்சத்திரங்கள் இதோ,

பர்வீன் பாபி!

இந்தி சினிமாவில் மாடர்ன் என்ற வார்த்தையை உட்புகுத்திய நடிகைகளில் இவரும் இவரும். 1970,80 களில் பெரும் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தார் பர்வீன் பாபி.

இவர் 1971-72 ஆண்டுகளில் மாடலாக இருந்து, பிறகு 1973ம் ஆண்டில் இருந்து பாலிவுட் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

இவருக்கு Delusional எனப்படும் மாய பிம்பங்கள் தோன்றுதல் அல்லது மிருட்சி சீர்கேடு எனப்படும் பிரச்சனை இருந்தது. இதன் காரணமாக பர்வீன் பாபி போதை பழக்கத்திற்கு அடிமையானார்.

2005ம் ஆண்டு எதிர்பாராத தருணத்தில் இவரது அப்பார்ட்மெண்டில் இறந்த நிலையில் இவர் கண்டெடுக்கப்பட்டார். இவர் கண்டெடுக்கப்பட்ட நாளில் இருந்து மூன்று நாளுக்கு முன்னரே இறந்திருக்க கூடும் என மருத்துவ பரிசோதனைகள் மூலம் அறியப்பட்டது.

ராமி ரெட்டி

அம்மன் திரைப்படம் முதல் பல ஆன்மீக மற்றும் பேய் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக திகழ்ந்தவர் ராமி ரெட்டி. இவர் 90களில் இந்திய சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக கருதப்பட்டவர்.

ஏறத்தாழ பல இந்திய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ராமி ரெட்டி.

இவர் கல்லீரல் பாதிப்பால் நீண்ட நாளாக பாதிக்கப்பட்டிருந்தார். ராமி ரெட்டி கடந்த 2011 ஏப்ரல் மாதம் 14 நாள் காலை 11.30 மணியளவில் மரணம் அடைந்தார். தனது உடல்நல கோளாறுகள் காரணமாக தனது கடைசி காலத்தில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு உருவம் மாறி காணப்பட்டார் ராமி ரெட்டி.

நிஷா நூர்

1980களில் தென்னிந்திய சினிமா துறையில் பிரபலமான நடிகையாக வலம்வந்தவர் நிஷா. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமலுடன் எல்லாம் ஜோடி சேர்ந்து படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சில பாலிவுட் படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ஒருவரால் ஏமாற்றப்பட்டதால் நிஷா பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டார். இதனால், திரை துறையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார் நிஷா.

பின்னாட்களில் இவரது நிலை கொஞ்சம், கொஞ்சமாக மோசமானது. ஒரு சமயத்தில் தெருவோரத்தில் கிடந்தார். பிறகு இவரை அருகே இருந்த மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போதுதான். இவர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அறியவந்தது. 2007ம் ஆண்டு மரணம் அடைந்தார் நிஷா நூர்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்