என்ன டார்லிங் இவ்வளவு நேரம் ஏன் ?

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்யோன்யத்தின் மூலமே அவர்களுக்கு திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்பதை நம்மால் கண்டுபிடித்துவிட முடியும்.

திருமணம் ஆன புதிதில் தம்பதியினருக்குள் இருக்கும் அன்யோன்யம், குழந்தை பெற்றெடுத்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடுகிறது.

காலம் கடந்து, குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கு செல்கையில் இவர்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கையில், கணவன் மனைவியருக்கு இடையிலான அன்யோன்யம் குறைந்துவிடுகிறது.

அப்படி புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதியினருக்கும், காலங்கள் சென்ற தம்பதியினருக்கும் நடக்கும் ருசிகரமான உரையாடல் இதோ,

* தொலைபேசியில் பேசும் போது அதிகம் தான் பேசாமல் அடிக்கடி உம்...ஆமா ...உம் ..என்று அடிக்கடி மெல்லிய சிரிப்பும் சிரித்தால், இப்பதான்..."யாருக்கோ நிச்சயம் பண்ணியிருக்கு" என்று அர்த்தம் ..

* என்ன டார்லிங் இவ்வளவு நேரம் ஏன் ..? போன் பண்ணல ..என்றால் திருமணம் ஆகி ஒருமாதம்.

*சாரிடா செல்லம்... டைம் கிடைக்கல. ஒரே பிசி...என்றால் திருமணம் ஆகி ஒரு வருடம் ..

*வீட்டில் இருந்து வெளியேறும் போது மனைவியிடம், இன்று நான் உனக்கு போன் பண்ண மாட்டன் ஏன்னா ..? மீட்டிங் இருக்கு ..என்று சொன்னால் திருமணம் ஆகி இரண்டு அல்லது மூன்று வருடம் ஆகும்.

*மனைவி "போன்" செய்தால்... என்ன ..? இப்ப ஏன் போன் பண்ணின ..? வீட்டுக்குதான வருவேன்...செத்தாபோயிடுவன் என்ன அவசரம் ...? என்று கத்தினால் திருமணம் ஆகி ஐந்து, ஆறு வருடம் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

அங்கேயிருந்தும் போன் வர்றதில்லை... இங்கேயிருந்தும் போன் போறதில்லை... அப்படியென்றால் 10 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments