கொத்து புரோட்டா சாப்பிடுவோம்...முத்தம் கொடுப்போம்!

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

சில்லறை கடை ஒன்றை நடத்தி வந்த ஒருவர், வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனது கடையை மூடிவிட்டு அக்கடையை வேறு ஒரு நபருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

கொத்து புரோட்ட தயார் செய்யும் ஒருவர் அந்த கடையை வாடகைக்கு எடுக்க முன்வந்தார்.

சுப நேரத்தில் கடை திறக்கப்பட்டதுடன் கடையில் பெயர் பலகையும் வைக்கப்பட்டது.

கொத்து புரோட்டா சாப்பிடுவோம் - துட்டு கொடுப்போம். என்று பெயர் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறைந்த விலையில் கொத்து புரோட்டா விற்பனை செய்யப்பட்டது. கொத்து புரோட்டா கடையில், கடையை நடத்தும் நபரின் மனைவி கணக்காளராக செயற்பட்டு வந்தார்.

பெயர் பலகை வைக்கப்பட்ட பின்னர் கொத்து புரோட்டா சாப்பிட வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒருநாள் கொத்து புரோட்ட சாப்பிட வந்தவர்களில் ஒரு இளைஞன், மது போதையில் இருந்துள்ளார்.

அவர் கொத்து புரோட்டாவை எடுத்துச் சென்று ஒரு நாட்காலியில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.

சாப்பிட்டு முடிந்த இளைஞன் நேரடியாக கணக்காளர் மேஜைக்கு அருகில் சென்று அங்கு அமர்ந்திருந்த பெண்ணின் முகத்திற்கு நேராக தனது முகத்தை கொண்டு சென்று பெண்ணை முத்தமிட்டுள்ளார்.

இளைஞனின் செயலால் வெட்கமும், கோபம் கொண்ட பெண் பலமாக சத்தமிட்டு நடந்ததை கணவரிடம் கூறியுள்ளார்.

இதனால், கோபமடைந்த கணவன் இளைஞனை கடுமையாக தாக்கியுள்ளார்.

ஏண்டா நீ என்ன அடிக்கிற?. பெயர் பலகையை போய் பாரு..என மதுபோதையில் இருந்த இளைஞன் சத்தமிட்டுள்ளார்.

இதனையடுத்து கொத்து புரோட்டா தயார் செய்யும் நபர் வெளியில் சென்று கடையின் பெயர் பலகையை பார்த்துள்ளார்.

அதில் கொத்து புரோட்டா சாப்பிடுவோம் - துட்டு கொடுப்போம் என்று எழுத்தப்பட்டிருந்த இடத்தில் " கொத்து புரோட்டா சாப்பிடுவோம் முத்தம் கொடுப்போம் முத்தம்" என்று யாரோ மாற்றி எழுதியிருந்தனர்.

கொத்து புரோட்டா சாப்பிடுவோம் முத்தம் கொடுப்போம் என கடையின் பெயர் பலகையில் காணப்பட்டதை கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்தாக கூறப்படுகிறது.

பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அவ்வப்போது பல்வேறு இடங்களில் நடப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

சில சம்பவங்கள் நமக்கு சிரிப்பு வரழைப்பதுண்டு, சில சம்பவங்கள் கோபத்தையும் ஏற்படுத்துவதுண்டு.

ஆனால் நாம் கூறப்போகும் இந்த சம்பவம் சுவராஸ்சியமானதும் சிரிப்பை வரவழைக்கும் சம்பவமாக இருக்கின்றது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments