அறிமுகமாகியது கூகுள் குரோம் 77 பதிப்பு: இதோ அட்டகாசமான அம்சங்கள்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

உலகளவில் அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலாவியாக கூகுள் குரோம் காணப்படுகின்றது.

இவ் உலாவியின் 77 வது பதிப்பு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அன்ரோயிட், விண்டோஸ், லினக்ஸ் மற்றும் iOS சாதனங்களில் இப் பதிப்பினை நிறுவிப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எனினும் அன்ரோயிட் இயங்குதளத்திற்கான பதிப்பில் சற்று கூடுதலான வசதிகள் தரப்பட்டுள்ளன.

முக்கியமாக Tab வசதியில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் இலகுவாக முகாமைத்துவம் செய்யக்கூடியதாக இருக்கின்றது.

முன்னர் அதிகளவு Tab திறக்கப்பட்டிருக்கும்போது அவற்றில் உள்ள தலைப்புக்களை பார்வையிட முடியாமல் இருந்தது.

ஆனால் தற்போது தலைப்புக்களை பார்வையிட முடியும்.

தவிர இணையப் பக்கங்களுக்கான Thumbnail வசதியும் தரப்பட்டுள்ளது.

அதேபோன்று இணைய உலாவியின் வர்ணத்திற்காக புதிய வகை தீம்கள் (Theme) தரப்பட்டுள்ளன.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்