ரோபோக்களுக்கு இனி நீங்களும் புரோகிராம் பண்ணலாம்: புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகம்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

மனிதர்களின் வேலைகளை இலகுவாக்கக்கூடிய ரோபோ தொழில்நுட்பமானது சாதாரணமானவர்களால் பயன்படுத்த முடியாததாக இதுவரை காலமும் இருந்தது.

எனினும் எவரும் இலகுவாக புரோகிராம் செய்துகொள்ளக்கூடிய வகையில் புதிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள Purdue பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே குறித்த அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் பயனர்கள் ரோபோ ஒன்றில் தமக்கு ஏற்றவாறு தொழிற்படக்கூடிய வகையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

மொபைல் சாதனங்கள் மூலம் புரோகிராம் செய்ய முடிவதுடன் அவற்றின் உதவியுடனேயே ரோபோக்களையும் இயக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்