உக்ரைனில் அறிமுகமாகும் Redmi Note 7 ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

Redmi Note 7 எனும் ஸ்மார்ட் கைப்பேசியானது முதன் முறையாக கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இக் கைப்பேசிக்கு கிடைக்கப்பெற்ற வரவேற்பினைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது உக்ரைனில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

6.3 அங்குலு அளவுடைய LCD தொழில்நுட்பத்தினை உடைய Full HD + தொடுதிரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியானது Snapdragon 660 Processor, பிரதான நினைவகமாக 3GB, 4GB, 6GB RAM மற்றும் 32GB அல்லது 64GB எனும் வெவ்வேறு கொள்ளளவுகளில் கிடைக்கப்பெறுகின்றது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 5 மெகாபிக்சல்கள் மற்றும் 48 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இதன் விலையானது 203 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்