புத்தம் புதிய வசதிகளுடன் அறிமுகமாகியது Firefox உலாவியின் புதிய பதிப்பு

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

கூகுள் குரோமிற்கு அடுத்தபடியாக மிகவும் பிரபல்யம் அடைந்த இணைய உலாவியாக மொஸில்லா நிறுவனத்தின் பையர்பாக்ஸ் உலாவி விளங்குகின்றது.

இந்த உலாவியின் புதிய பதிப்பு ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

66 வது பதிப்பாக அறிமுகமாகியுள்ள இப் புதிய பதிப்பில் புதிய அம்சங்கள் சில உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் முக்கியமானது Autopalay Block வசதி ஆகும்.

அதாவது இணையப் பக்கங்களில் காணப்படும் தானாக இயங்கக்கூடிய வீடியோக்களை ப்ளாக் செய்து வைத்துக்கொள்ள முடியும்.

இதனால் இணையத்தளம் வேகமாக தரவிறங்கக்கூடியதாக இருப்பதுடன், டேட்டா விரையமாவதும் தடுக்கப்படுகின்றது.

இவ் வசதியின் ஊடாக யூடியூப் போன்ற தளங்களிலுள்ள வீடியோக்களையும் தானாக இயங்குவதிலிருந்து நிறுத்தி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்