சுட்டீஸ் உங்களுக்கு ராஜா ராணி கதை தெரியும் - மாம்பழ குரங்கு கதை தெரியுமா?

Report Print Mahalakshmi Mahalakshmi in குழந்தைகள்

மலை மேல் ஒரு முருகன் கோயில், அங்கு ஒரு மாம்பழ வியாபாரி மாம்பழம் விற்றுக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த மாம்பழங்களை பார்த்த குரங்கு அந்த வியாபாரியிடம் இது என்ன பழம், எனக்கு ஒன்று தருவீர்களா என்று கேட்டிருக்கிறது. இது மாம்பழம், ஆனால் பணம் இல்லாமல் பழம் தரமாட்டேன் என்று வியாபாரி கூறியுள்ளான்.

குரங்கு பணம் இல்லாத காரணத்தால் அழுதுகொண்டே இருந்தது. குரங்கின் அழுகுரலை கேட்ட ஒரு சித்தர், ஏன் அழுகிறாய் என்று குரங்கிடம் கேட்டார். அதற்கு குரங்கும் நடந்ததை கூற, சித்தர் தன்னிடம் இருந்த பணம் கொடுத்து குரங்கை மாம்பழம் வாங்கி சாப்பிட சொன்னார்.

சந்தோஷமாக குரங்கும் மாம்பழம் வாங்கி சாப்பிட்டது. அப்போது சித்தர் இது போன்ற மாம்பழம் உனக்கு தொடர்ந்து கிடைக்க நான் வழி சொல்லட்டுமா என்று கேட்டார், அதற்கு குரங்கு உடனே சொல்லுங்கள் என்று கூறியது.

இங்கு மாம்பழம் வாங்கும் எல்லோரும் மாம்பழம் சாப்பிட்டு விட்டு கொட்டையை இங்கேயே போட்டு விட்டு சென்று விடுவார்கள். நீ அதை எல்லாம் கொண்டு போய் மலை மேல் நட்டு தண்ணீர் ஊற்றி வந்தால் அதில் மாஞ்செடி முளைக்கும். மாஞ்செடி பிறகு வளர்ந்து மாமரமாக மாறும். பிறகு அதில் நிறைய மாம்பழம் பழுக்கும். அவற்றை நீங்கள் அனைவரும் பறித்து சாப்பிடலாம் என்றார் சித்தர்.

இதை கேட்ட குரங்கு சித்தர் சொன்னது போல் கொட்டைகளை பொறுக்க ஆரம்பித்தது. இந்த குரங்கை பார்த்து மற்ற குரங்குகளும் இதேபோல் கொட்டைகளை மலை மேல் கொண்டு சென்று நட தொடங்கின.

சில வருடங்களில் அந்த மலை உச்சி பெரிய மாந்தோப்பாக மாறியது.

சித்தர் சிறிது காலம் பல ஊர்களுக்கு சென்று திரும்பி வந்தார். அவர் அந்த மாந்தோப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு அந்த தோப்பிற்குள் சென்றார். சித்தரை பார்த்த குரங்கு அடையாளம் கொண்டு, அய்யா, நீங்கள் கொடுத்த ஆலோசனையினால் நாங்கள் இவ்வளவு பெரிய தோப்பை உருவாக்க முடிந்தது என்றது. என்னதான் நான் அறிவுரை கூறினாலும் நீங்கள் அதை கேட்டு செயல் பட்டது மிகவும் சந்தோசம் என்றார் சித்தர்.

அதோடு அந்த சித்தர் குரங்கிற்கு மாம்பழ குரங்கு என்று பெயரும் வைத்தார்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments