உலகுக்கு அறிமுகமாகும் புதிய இணைய வசதி

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

ரஷ்யாவானது எப்போதும் தனது நாட்டினதும், நாட்டு மக்களினதும் தரவுகளை ஹேக்கர்கள் திருடுவதிலிருந்து பாதுகாப்பதில் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றது.

இதற்கு உதாரணமாக கூகுள் தேடுதளத்தினைப் பயன்படுத்தாது தனது நாட்டிற்கென யாண்டெக்ஸ் எனும் தேடுபொறியினை பயன்படுத்துவதை குறிப்பிடலாம்.

இதேபோன்று புதிய இணைய வசதி ஒன்றினையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Runet எனும் குறித்த தொழில்நுட்பம் தற்போது வெற்றிகரமாக பரிசீலிக்கப்பட்டுள்ளதுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களுக்கு இது தொடர்பான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு இணைய தகவல் பரிமாற்றத்தினையும் தாம் விரும்பியவாறு வடிகட்டக்கூடியதாக இருத்தலே இதன் தார்ப்பரியம் என என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போதுவரை இதன் செயற்பாடுகள் தொடர்பில் இரகசியம் காக்கப்பட்டுவருகின்றது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்