இணைய இணைப்பு இல்லாதபோதிலும் டுவிட்டரில் டுவீட் செய்யலாம்: எப்படி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

பிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டரில் டுவீட் செய்வதற்கு பொதுவாக இணைய இணைப்பு அவசியம் ஆகும்.

எனினும் தற்போது இணைய இணைப்பு அற்ற நேரத்திலும் டுவீட் செய்யக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கைப்பேசிகளில் உள்ள சாதாரண குறுஞ்செய்தி வசதியினைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இச் சேவையினைப் பயன்படுத்துவதற்கு Twitter Short Code தெரிந்திருத்தல் அவசியமாகும்.உதாரணமாக இந்திய பயனர்களுக்கான Twitter Short Code 9248948837 ஆகும்.

எனவே குறுஞ்செய்தினை தட்டச்சு செய்த பின்னர் 9248948837 என்ற இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.குறித்த குறுஞ்செய்தியானது டுவிட்டரில் டுவீட்டாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

அத்துடன் 9248948837 இலக்கத்தின் ஊடாக கைப்பேசிகளுக்கு டுவிட்டரிலிருந்து டுவீட்களை குறுஞ்செய்தி வடிவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers