இந்தியாவை விட அதிக இணைய வேத்தினை கொண்டிருக்கும் 15 நாடுகள்: இலங்கையும் உள்ளடக்கம்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

Ookla ஆனது Speedtest Global Index அடிப்படையில் 145 நாடுகளில் உள்ள இணைய வேகத்தினை பட்டியல் இட்டு வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியா 131 ஆவது இடத்தில் உள்ளது. ஆசிய நாடுகளை மாத்திரம் கருத்தில்கொள்ளும்போது இந்தியாவினை விடவும் மேலும் 15 நாடுகள் அதிக வேகம் கொண்ட இணைய வசதியினை கொண்டிருக்கின்றன.

இவற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் என்பனவும் உள்ளடங்கும்.

இதேவேளை உலக அளவிலான சராசரி இணைய தரவிறக்க வேகமானது 28.02 Mbps ஆக அதிகரித்துள்ளதுடன், சராசரி தரவேற்ற வேகமானது 10.87Mbps ஆகவும் இருக்கின்றது.

ஆசிய நாடுகளில் தென்கொரியா முன்னிலை வகிக்கின்றது. இந்நாட்டில் தரவிறக்க வேகம் 111.00Mbps ஆகவும், தரவேற்ற வேகம் 16.51Mbps ஆகவும் காணப்படுகின்றது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers