நீங்கள் இணையத்தில் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டுமா? இவற்றை கூகுளில் தேடாதீர்கள்

Report Print Kavitha in இன்ரர்நெட்

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் வழங்கும் கூகுள் தேடலில் உலகிலுள்ள ஏராளமான விடயங்களை தேடிப்பெற்றுக்கொள்ள முடியும்.

இதனால் பலரும் கூகுள் தேடலிலே ஆர்வம்காட்டி வருகின்றனர்.

எனினும் கூகுள் தேடலின்போது சில விடயங்களை தவிர்ப்பதன் ஊடாக இணையத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இணையத்திருடர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். அவ்வாறான சில விடயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • ஒன்லைன் வங்கி சேவையினை பெற்றுக்கொள்வதற்காக உங்கள் வங்கியின் பெயரை கூகுளில் தேடக்கூடாது.
  • வாடிக்கையாளர் சேவை இலக்கங்கள் மற்றும் நிறுவனங்களின் தொலைபேசி இலக்கங்களை கூகுளில் தேடக்கூடாது.
  • அப்பிளிக்கேஷன்கள் மற்றும் மென்பொருட்களை கூகுளின் ஊடாக தேடி தரவிறக்கம் செய்தல் கூடாது.
  • மாத்திரைகள் மற்றும் நோய் அறிகுறிகள் தொடர்பான விடயங்களை தேடுதலை தவிர்க்க வேண்டும்.
  • பங்கு சந்தை மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகள் தொடர்பாக தேடக்கூடாது.
  • அரச இணையத்தளங்களை தேடுதலையும் தவிர்க்க வேண்டும்.
  • சமூகவலைத்தள முகவரிகளை கூகுளில் தேடி லாக்கின் செய்தலை தவிர்க்க வேண்டும்.
  • மின் வணிக இணையத்தளங்கள் மற்றும் அவை வழங்கும் சலுகைகள் தொடர்பாக தேடுதலையும் தவிர்க்க வேண்டும்.
  • இலவச ஆன்டிவைரஸ் மென்பொருட்களை தேடுதலை தவிர்க்க வேண்டும்.
  • விலைக்கழிவுகளை பெறுவதற்கான கூப்பன் குறியீடுகளை கூகுளில் தேடக்கூடாது.

மீறி இவற்றினை தேடும்போது ஹேக்கர்கள் மேற்கண்ட தேடல்களை அடிப்படையாகக் கொண்டு தகவல்களை திரட்டி பயனர்களை நெருங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்