சிறந்த இணைய உலாவிகளுள் ஒன்றான மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் உலாவியில் புதிய வசதி ஒன்றினை உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பணம் செலுத்தி இணைய உலாவியை பயன்படுத்தக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இவ்வாறு பணம் செலுத்தி பயன்படுத்தும் பயனர்களுக்கு சில வரப்பிரசாதங்களை வழங்குவதற்கு மொஸில்லா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதாவது VPN சேவை மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் சேவை என்பவற்றினை இவர்கள் பயன்படுத்த முடியும்.
இவ் வசதியை எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் அறிமுகம் செய்வதற்கு மொஸில்லா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதலே VPN சேவையை பரீட்சிக்க ஆரம்பித்த மொஸில்லா நிறுவனம் தற்போது இதனைப் பயன்படுத்துவதற்கு 10 டொலர்கள் கட்டணத்தையும் அளவிடவுள்ளது.