அதிவேக இன்டர்நெட்டுக்காக பேஸ்புக்கின் அசர வைக்கும் புதிய திட்டம்!

Report Print Kabilan in இன்ரர்நெட்

இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பறவை வடிவிலான ட்ரோன்களை பயன்படுத்தும் திட்டத்தை பேஸ்புக் மீண்டும் கையில் எடுத்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் ‘அக்குய்லா’ எனும் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கும் திட்டத்தை அறிவித்தது. பின் தங்கிய நாடுகளில் உள்ள கிராமங்களுக்கு அதிவேக இன்டர்நெட் கிடைக்கும் வகையில், பெரிய அளவிலான ட்ரோன்களை ஆகாயத்தில் நிலைநிறுத்துவதே இந்த திட்டமாகும்.

சோதனை முயற்சியாக 2017ஆம் ஆண்டு அமெரிக்காவில், ‘அக்குய்லா’ ட்ரோன்களை ஒன்றரை மணி நேரங்களுக்கும் மேலாக நிலைநிறுத்தி பேஸ்புக் வெற்றி கண்டது. இதற்காக 400 கிலோ அளவிலான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், இந்த திட்டத்தை கைவிடுவதாக பேஸ்புக் கடந்த 2018ஆம் ஆண்டு அறிவித்தது. இந்நிலையில், இதே திட்டத்தை தற்போது மீண்டும் செயல்படுத்த பேஸ்புக் முடிவு செய்துள்ளது.

இதற்காக பெரிய அளவிலான ட்ரோன்களை பயன்படுத்தாமல், சிறிய பறவை அளவிலான ட்ரோன்களை பயன்படுத்த பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இந்த ட்ரோன்கள் ஹை-டென்சிட்டி ஸ்டேட் டிரைவ்களைக் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ட்ரோன்கள் பயனர்களின் ஸ்மார்ட்ஃபோன்களில் அதிவேக இணைய வசதியை வழங்கும் திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த நிறுவனத்தின் ட்ரோனாக இருந்தாலும் பயன்படுத்தப்பட போகும் நாட்டின் அனுமதியை வாங்க வேண்டும்.

கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் இது மாதிரியான ட்ரோன் முயற்சிகளை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Niranjan Shrestha

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers