இணைய உலகில் மீண்டும் ஒரு அதிர்ச்சி: பல தகவல்கள் திருட்டு

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

இன்றைய இணைய உலகில் பயனர்களின் பல தரவு, தகவல்கள் இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவல்களை ஹேக்கர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக திருடி வருகின்றனர்.

பேஸ்புக், கூகுள் போன்ற முன்னணி இணையத்தளப் பயனர்களும் இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மற்றுமொரு இணையத்தளத்திலிருந்தும் தரவுகள் திருடப்பட்டுள்ளன.

Mumsnet எனப்படும் இணையத்தளத்திலிருந்தே இந்த தகவல் திருட்டு இடம்பெற்றுள்ளது.

மின்னஞசல் முகவரி, கணக்கு விபரங்கள், பதிவு தொடர்பான விபரங்கள், தனிப்பட்ட குறுஞ்செய்திகள் என்பன திருடப்பட்டுள்ளன.

இந்த தகவலை Mumsnet இணையத்தளத்தின் நிறுவுனர் Justine Roberts உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers