773 மில்லியன் ஈமெயில்கள், 21 மில்லியன் கடவுச்சொற்கள் இணையத்தில் கசிந்தது

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

Have I Been Pwned இணையத்தள நிறுவுனரும், இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளருமான Troy Hunt என்பவர் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதன்படி 2008 ஆம் ஆண்டு முதல் 772,904,991 மின்னஞ்சல் முகவரிகளும், 21,222,975 கடவுச்சொற்களும் இணையத்தளங்களில் கசிய விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் அனைத்தும் சுமார் 2,000 வரையான வெவ்வேறு இணையத்தளங்களிலிருந்து கசிந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே 10 வருடங்களுக்கு மேல் தமது கடவுச்சொற்களை மாற்றாது பயன்படுத்துபவர்கள் இவ்வாறான ஆபத்தில் சிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், தற்போதாவது கடவுச் சொற்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் இந்த இணையத்தளத்திற்கு விஜயம் செய்து தமது கடவுச் சொல் இணையத்தில் கசிந்துள்ளதாக என்பதை அறிந்துகொள்ள முடியும்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்