இணையத்தில் கசிந்த மில்லியன் கணக்கான சுயவிபரக் கோவைகள்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

அண்மைக்காலமாக தனிநபர் தகவல்கள் இணையத்தளங்களிலிருந்து கசிவது அதிகரித்து வருகின்றது.

இதனால் உலகளாவிய ரீதியில் இணையத்தளங்களை பயன்படுத்த மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதாவது சுமார் 200 மில்லியன் பயனர்களின் சுயவிபரக் கோவைகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவை அனைத்தும் சீன நாட்டு மக்களினுடையதாகும்.

சீனாவின் பிரபல வேலைவாய்ப்பு தளம் ஒன்றிலிருந்தே இந்த தகவல்கள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெயர்கள், மொபைல் இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள், கல்வி தகவல்கள் உட்பட மேலும் பல தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்