பல உத்தியோகபூர்வ இணையத்தளங்களை மூடுகின்றது அமெரிக்கா

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

அமெரிக்காவில் உள்ள பல அரச இணையத்தளங்கள் பயனர்களால் சுமுகமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு அவ்வாறான இணையத்தளங்களை மூடுவதற்கு அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி US Department of Justice, Court of Appeals மற்றும் Nasa போன்ற மேலும் பல இணையத்தளங்கள் இவ்வாறு மூடப்படவுள்ளன.

இவ் இணையத்தளங்களில் பாதுகாப்பு தொடர்பான பத்திரங்களும் (Security Certificate) புதுப்பிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதுகாப்பு பத்திரம் புதிப்பிக்கப்படாமையினால் பயனர்கள் குறித்த இணையத்தளங்களைப் பயன்படுத்துவதனால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதடன் அவர்களின் தகவல்கள் திருட்டுப்போகும் சாத்தியங்களும் காணப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers