இணைய இணைப்பில் புதிய மைல் கல்லை எட்டியது இந்தியா

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

இந்தியாவில் இணைய இணைப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 50 கோடியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2016 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 65 சதவீதத்தினால் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தற்போது 56 கோடி பேர் இந்தியா முழுவதும் இணைய இணைப்புக்களை பயன்படுத்துவதாக Telecom Regulatory Authority of India (TRAI) தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாத காலப் பகுதியில் இந்த எண்ணிக்கை 36 கோடியாக இருந்துள்ளது.

அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 திகதியில் 49 கோடி எட்டிய நிலையில் இவ் வருடம் ஜுன் மாதத்தில் 51 கோடியாக காணப்பட்டது.

அதன் பின்னர் செப்டெம்பர் மாதம் 31 ஆம் திகதி மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி 56 கோடியாக காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களிலேயே அதிகளவான இணையப் பாவனையாளர்கள் புதிதாக இணைந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்