இணைய ஜாம்பவான் கூகுளிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

உலகின் அனைத்து நாடுகளிலும் தனது தேடுபொறி உட்பட ஏனைய சேவைகளின் ஊடாகவும் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனமாக கூகுள் விளங்கிவருகின்றது.

இந் நிறுவனம் தனது சேவைகளை மிக விரைவாக வழங்கிவருகின்றமையே முன்னணியில் திகழ்வதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாகும்.

எனினும் கடந்த திங்கட்கிழமை பாரிய பிரச்சினையை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு கூகுள் தள்ளப்பட்டிருந்தது.

அதாவது ரஷ்யா, சீனா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் கூகுளின் பாவனை அன்றைய தினம் மிகவும் குறைவாகவே காணப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை மணி நேரம் இவ்வாறு ஸ்தம்பித்துள்ளது.

இதற்கு அந்தந்த நாடுகளில் இணைய சேவைகளை வழங்கிவரும் நிறுவனங்களின் வலையமைப்பு பாதிக்கப்பட்டிருந்தமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் TransTelekom, சீனாவின் China Telecom மற்றும் நைஜீரியாவின் MainOne ஆகிய நிறுவனங்களின் சேவையே பாதிப்புக்குள்ளாகியிருந்தது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...