ஜனவரி 16 மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்துடன் களமிறங்கும் இந்தியா!

Report Print Ragavan Ragavan in இந்தியா
105Shares

இந்தியா அதன் 1.3 பில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் மிகப் பெரிய திட்டத்தை வரும் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது.

உலகில் மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளின் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு இந்தியா.

அதேபோல், உலகிலேயே கொரோனா வைரஸால் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை பதிவு செய்துள்ள நாடுகளின் பட்டியலிலும் இந்திய தான் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாளிலிருந்து இன்று வரை இந்தியாவில் 10.5 மில்லயன் பாதிப்புகள் அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளன. அதில் 151,198 பேர் இறந்துள்ளனர். சமீப நாட்களில் ஒவ்வொரு நாளும் 16,000 முதல் 18,000 வரையிலான புதிய தொற்றுகள் பதிவாகிவருகின்றன.

இதற்கிடையில், மிகவும் வேகமாக பரவக்கூடியதாக பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் வகையிலும் கிட்டத்தட்ட 90க்கும் மேற்ப்பட்ட பாதிப்புகள் சமீபத்தில் இந்தியாவில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், இந்தியா கொரோனா வைரஸுக்கு எதிரான அதன் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை வரும் ஜனவரி 16-ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக வரும் ஜூலை மாதத்திற்குள் 300 மில்லியன் குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என நம்பப்படுகிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு சமம்.

முதலில் 30 மில்லியன் சுகாதார மற்றும் முன்னிலை பணியாளர்கள் தங்கள் தடுப்பூசியை பெறுவார்கள். ஆவர்களைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டோர், நோயாளிகள் என 270 மில்லியன் மக்கள் தங்கள் தடுப்பூசியைப் பெறுவார்கள்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த, 700 மாவட்டங்களில் சுமார் 150,000 ஊழியர்கள் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆக்ஸ்போர்டு /அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் தடுப்பு மருத்து மற்றும் உள்நாட்டு மருந்து தயாரிப்பாளரான பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 29,000 குளிர்-சங்கிலி புள்ளிகள், 240 வாக்-இன் குளிரூட்டிகள், 70 வாக்-இன் உறைவிப்பான், 45,000 பனி மூடிய குளிர்சாதன பெட்டிகள், 41,000 ஆழமான உறைவிப்பான் மற்றும் 300 சூரிய குளிர்சாதன பெட்டிகள் தயாராக உள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்