தமிழகத்தில் திருமணம் செய்துகொள்ளும்படி நச்சரித்த காதலியை, சாதியைக் காரணம் காட்டி காதலன் கொலை செய்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் உள்ள ஒரு பெரிய பனியன் கம்பெனிக்கு அருகே உள்ள ஒரு புதரில் கடந்த செவ்வாய்கிழமை ஒரு இளம் பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவத்தின் அருகிலேயே கிடந்த அடையாள அட்டையின் மூலம், அப்பெண் வேடசந்தூர் அருகே தென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என தெரியவந்தது.
ஜனவரி 1-ம் தேதி வேலைக்குச் சென்ற அந்த நபர், மாலை வீடு திரும்பவில்லை. எனவே ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் ஜனவரி 3-ம் தேதி போலீசில் புகார் அளித்தனர். இந்த கட்டத்தில்தான் ஜெயஸ்ரீயின் உடல் புதரில் கண்டெடுக்கப்பட்டது.
ஜெயஸ்ரீயின் பெற்றோர் அளித்த தகவல்களின்படி, ஜெயஸ்ரீயுடன் பணிபுரிந்த தங்கத்துரை என்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இருப்பினும், அவரை முழுமையாக விசாரிக்காமல் போலீசார் அவரை விடுவித்துள்ளனர்.
இதனால் கடுப்பான ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர், அவரை கைது செய்யவில்லை என்றால் சடலத்தை வாங்கமாட்டோம் என சாலையை மறித்து போராட்டம் நடத்தியுள்ளனர். பின்னர், போலீசார் அவர்களுடன் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தியதை போராட்டம் நிறுத்தப்பட்டது
இதைத்தொடர்ந்து, ஜெயஸ்ரீயின் செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, ஜனவரி 1-ஆம் திகதி தங்கதுரையின் எண்ணிலிருந்து 20-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன என்பது தெரியவந்தது. காவல்துறையினர் உடனடியாக தங்கதுரையைப் பிடித்து தீவிரமாக விசாரித்தபோதுதான் ஜெயஸ்ரீயைக் கொன்றது அவர்தான் என்பது தெரியவந்தது.
தங்கதுரையின் சொந்த ஊர் பழனி. அவர் அங்கிருந்து வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் தங்கியிருந்து பணியாற்றிவருகிறார்.
ஒரே ஆலையில் பணிபுரிந்த ஜெயஸ்ரீயும் தங்கத்துரையும் காதலித்துள்ளனர். இருவரும் விடுமுறை நாட்களில் தனியாக சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்த ஜெயஸ்ரீ, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கத்துரையை வற்புறுத்தி வந்துள்ளார்.
ஜெயஸ்ரீ பட்டியலினத்தவர் என்பதால், அவரது பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று மறுத்துள்ள தங்கதுரை, ஒரு கட்டத்தில் ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கே செல்போனில் தொடர்பு கொண்டு 'உங்கள் மகள் இப்படி என்னை நச்சரிக்கிறார்' என கூறியுள்ளார். ஜெயஸ்ரீயின் பெற்றோரும் மகளை கண்டித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையில் சில நாட்களாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று மாலை ஜெயஸ்ரீ தங்கதுரையை பார்க்க சென்றுள்ளார். அப்போது தங்கதுரை ஜெகநாதன் எனும் தனது நபருடன் அவரது பைக்கில் வந்துள்ளார்.
மூவரும் ஓரிடத்தில் சந்தித்த நிலையில், உடனடியாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஜெயஸ்ரீ மீண்டும் தங்கதுரையை வற்புறுத்தியுள்ளார். அப்போது நடந்த கடும் வாக்குவாதத்தில் கோபமடைந்த தங்கதுரை தனது காதலியை கழுத்தை நெரித்து அங்கேயே கொலை செய்துள்ளார்.
நடந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருக்க, தங்கதுரையும் அவரது நண்பர் ஜெகநாதனும் உடலை நூற்பாலைக்கு பின்னால் ஒரு முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
தங்கதுரை மற்றும் ஜெகநாதன் இருவரையும் கைது செய்துள்ள பொலிஸார், அவர்கள் மீது கொலை மற்றும் பட்டியலினத்தோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் ஜெயஸ்ரீயின் பெற்றோர், அவர் தங்கதுரையை காதலிக்கவில்லை, நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றிய தங்கதுரைக்கும் ஜெயஸ்ரீக்கும் வேலை தொர்பான சில பிரச்சினையால் இப்படி நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பொலிஸாரின் அடுத்தக்கட்ட விசாரணையில் தான் சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன என்பது தெரியவரும்.