என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்! அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரஜினிகாந்த மீண்டும் முக்கிய அறிக்கை

Report Print Basu in இந்தியா
540Shares

தான் அரசியலுக்கு வர வேண்டுமென்று போராட்டங்களை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என டிசம்பர் 3ம் திகதி என ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த, பின்னர் டிசம்பர் 29ம் திகதி தனது உடல்நிலையை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டார்.

இது ரஜினி ரசிகர்களக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. அறிக்கை வெளியான அன்றை தினமே போயஸ் கார்டன் வீட்டிற்கு முன் கூடிய ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ரஜினி தனது அரசியல் முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டியும், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தியும் ஜனவரி 10ம் திகதி ரஜினி ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தற்போது ரஜினிகாந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருக்கும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது.

தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாத மக்கள் மன்றத்தினர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.

நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்வதாக ரஜினி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்