சென்னையில் குவிந்த ரஜினி ரசிகர்கள்! இப்போ இல்லேன்னா எப்போ... வா தலைவா வா என பாட்டுப்பாடி போராட்டம்! வீடியோ காட்சி

Report Print Basu in இந்தியா
210Shares

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என டிசம்பர் 3ம் திகதி நடிகர் ரஜினிகாந்த ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ரஜினி ஐதராபாத் சென்றிருந்த நிலையில் படக் குழுவினர் 4 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதனைத்தொடர்ந்து, இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருந்ததால், 3 நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்த ரஜினி குணமடைந்து சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்திற்கு திரும்பினார்.

பின்னர், டிசம்பர் 29ம் திகதி தனது உடல்நிலையை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டார்.

இது ரஜினி ரசிகர்களக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. அறிக்கை வெளியான அன்றை தினமே போயஸ் கார்டன் வீட்டிற்கு முன் கூடிய ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ரஜினி தனது அரசியல் முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டியும், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தியும் இன்று ஜனவரி 10ம் திகதி ரஜினி ரசிகர்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி போராட்டம் நடக்கறிது.

இதில் கலந்துக்கொண்ட ரசிகர்கள், இப்பா இல்லேன்னா எப்போ, வா தலைவா வா என கூச்சலிட்ட படி பாடல் பாடி போராடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்