இலங்கையில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது! நடிகர் கமல் முள்ளிவாய்க்கால் விவகாரம் குறித்து ஆவேசம்

Report Print Santhan in இந்தியா
529Shares

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது, அது வரலாறு மாறாது என்று ஆவேசமாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைகவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.

இதற்கு, தமிழக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது.

முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்