வருகிறார் சசிகலா! ஜெயலலிதா நினைவு நாளுக்கு முன் விடுதலை? உச்சகட்ட மகிழ்ச்சியில் உறவுகள்

Report Print Santhan in இந்தியா
2826Shares

சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விடுதலை திகதி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் மன்னார்குடி உறவுகள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சசிகலா உட்பட இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனை முடியவுள்ளது. இவர்களுக்கான அபராதத் தொகையும் செலுத்தப்பட்டுவிட்டதால், விரைவில் விடுதலையாகலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் திகதி சசிகலா விடுதலையாக இருக்கிறாராம். இதை சிறை துறையே தெரிவித்துள்ளதாம்.

ஆனால் வாய்மொழியாகவே கூறியுள்ளதே தவிர, எழுத்துப்பூர்வமாக எந்த வித அறிவிப்பும், ஆதாரமும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த விடுதலை குறித்த ஆர்டர் வரும் திங்கட் கிழமை சசிகலாவிடம் வழங்கப்படவுள்ளதாம், ஜெயலலிதா நினைவு நாளைக்கு முன்பேயே வந்துவிட வேண்டும் என்று சசிகலா நினைக்கிறாராம், அதற்கான வேலைகளும் நடந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்