5 வயது மகளின் வித்தியாசமான பிறந்த நாள் ஆசை! காரணத்தை கெட்டு நெகிழ்ந்து போன தந்தை: குவியும் வாழ்த்துக்கள்

Report Print Santhan in இந்தியா
729Shares

இந்தியாவில் 5 வயது சிறுமி ஒருவர் வித்தியாசமாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், அதை அறிந்த பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

மும்பை சிறப்பு படை பொலிஸ் பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் நினாட். இவருக்கு ஜான்வி மற்றும் உர்வி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் உர்விக்கு 5 வயதாகிறது. உர்விக்கு சமீபத்தில் தான் பிறந்தநாள் வந்தது. இந்த பிறந்த நாளை கொண்டாடுவதற்கு, உர்விக்கு வித்தியாசமான ஆசை ஏற்பட்டுள்ளது.

வழக்கம் போல் இந்த பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடாமல் பிறந்த நாளை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என தனது ஆசை குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அவர், மகளின் ஆசையை நிறைவேற்ற முடிவுசெய்தார். அதன் படி பிறந்த நாளன்று, தனது மகளின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

அதாவது ஊர்விக்கு நடுக்கடலில் தான் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்பது தான் அந்த ஆசை,

அதே நேரத்தில் பெண் குழந்தைகளைக் காப்பதற்காகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இதன்மூலம் வலியுறுத்த அவர் முடிவு செய்தார்.

அன்படி நினாட் தனது மகள், குடும்பத்தினருடன் அர்னாலா கடற்கரைக்கு சென்ற அவர், அங்கிருந்த படகு மூலம் கரையிலிருந்து 3.6 கி.மீற்றர் தூரம் கடலுக்குள் சென்றனர்.

அவர்கள் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகள் அணிந்து இருந்தனர். பின்னர் உர்வி மனதைரியத்துடன் தனது தந்தையுடன் கடலில் இறங்கினாள்.

தெர்மோகால் உதவியுடன் கேக்கை கடலில் மிதக்க விட்டு அதனை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினாள். உர்வி வெட்டிய கேக்கில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் என்ற வரிகள் இடம் பெற்று இருந்தன.

மனதைரியத்துடன் நடுக்கடலில் 5 வயது சிறுமி பிறந்த நாளை கொண்டாடிய விதமும், அதன்மூலம் உர்வி ஏற்படுத்திய விழிப்புணர்வும் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியதுடன், அவருக்கு பலரும் இப்போது பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்