பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தை! தோழியே சித்தியானதால் ஆத்திரமடைந்த மகன் செய்த திடுக்கிடும் செயல்

Report Print Raju Raju in இந்தியா
1525Shares

தமிழகத்தில் தனது பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தையை மகன் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியை சேர்ந்தவர் தங்கராஜ் (70). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

தங்கராஜ் கடந்த 15 ஆண்டுகளாக 2 வது மனைவி சண்முகசுந்தரியுடன் வசித்து வருகிறார்.

தங்கராஜின் மூத்த மனைவியின் மகன் திருக்குமரன் (43). இவர் கடையம் அருகேயுள்ள புலவனூரில் வசித்து வருகிறார்.

சண்முக சுந்தரி திருக்குமருடனுன் ஒரே பள்ளியில் படித்துள்ளார். சண்முக சுந்தரியிடம் ஆசை வார்த்தை கூறி தங்கராஜ் அவரை திருமணம் செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது. தனது தோழி தனது சித்தியானதால் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார் திருக்குமரன்.

இந்த நிலையில் , தங்கராஜ், தன் பெயரிலிருந்த 40 ஏக்கர் சொத்தில் 15 ஏக்கர் நிலத்தை மூத்த மனைவி வெள்ளையம்மாளுக்கும், 25 ஏக்கர் நிலத்தை இரண்டாவது மனைவி சண்முக சுந்தரிக்கும் எழுதி வைத்துள்ளார்.

இதன் காரணமாக, அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே 10 வருடங்களுக்கும் மேலாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தங்கராஜூக்கும் அங்கு வந்த திருக்குமரனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திருக்குமரன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தந்தை தங்கராஜை வெட்டியுள்ளார்.

இதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் திருக்குமரன் பொலிசில் சரணடைந்தார்.

இதையடுத்து பொலிசார் தங்கராஜ் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்