உங்கள் மகள் மாரடைப்பால் இறந்துவிட்டாள்! இளம் வயது மகள் குறித்து தந்தைக்கு வந்த போன்... மாப்பிள்ளை வீட்டில் அவர் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா
1367Shares

இந்தியாவில் திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் கணவர் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவத்தில் பொலிசார் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குர்மீத் சிங். இவருக்கும் குஷ்தீப் என்ற இளம்பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் குஷ்தீப் தந்தைக்கு குர்மீத்தின் வீட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் போன் வந்தது.

அப்போது போனில் பேசிய நபர்கள், உங்கள் மகள் குஷ்தீப் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என கூறினார்கள்.

இதை கேட்டு பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் செய்த குர்மீத் குடும்பத்தார் உங்கள் மகள் குஷ்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

இதனால் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்த பெண் வீட்டார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு வீட்டு முற்றத்தில் கட்டிலில் குஷ்தீப் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து அவர்கள் உடனடியாக பொலிசில் புகார் கொடுத்தனர்.

அதில், எங்கள் மகளை கணவர் வீட்டார் அடித்து கொன்றுள்ளனர், இதை நாங்கள் பார்தோம் என தெரிவித்துள்ளனர்.

புகாரை தொடர்ந்து பொலிசார் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்