தம்பி இறந்த செய்தியை மறைத்து அக்காவுக்கு நடந்த திருமணம்! சடலத்தைப் பார்த்து கதறி அழுத பரிதாப சம்பவம்

Report Print Santhan in இந்தியா
2288Shares

தமிழகத்தில் தம்பி உயிரிழந்த சம்பவத்தை மறைத்து அக்காவிற்கு திருமணம் நடந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன்(24). இவரின் அக்காவிற்கு திருமணம் என்பதால், இவர் திருமணத்திற்கு செல்வதற்காக ஜெகதீசன் இரு சக்கர வாகனத்தில், தன்னுடன் கார்த்திகேயன்(20)பார்த்தசாரதி(20) என இரண்டு நண்பர்களையும் அழைத்துச் சென்றுள்ளார்.

மூன்று பேரும் ஒரே பைக்கில் மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஒரு வழிப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று எதிர்பாரதவிதமாக, எதிரே வந்த அரசு பேருந்து மீது இவர்கள் மோதினர்,

இதனால் பார்த்தசாரதி மற்றும் கார்த்திகேயன் தூக்கி வீசப்பட்டனர். ஜெகதீசன் இரத்த காயங்களோடு உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, அருகில் இருப்பவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், மருத்துவர்கள் எவ்வளவு போராடியும், கார்த்திகேயனை காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்தில் 3 பேரும் உயிரிழந்த செய்தியை கேட்டு பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இடையில் முகூர்த்த நேரம் நெருங்கி கொண்டே இருந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர். திருமணம் நின்றுவிடுமோ என்ற பயத்தில் தம்பி இறந்ததை கல்யாண பெண்ணிற்கும், அவரது பெற்றோருக்கும் விஷயம் சொல்லாமல் வைக்கப்பட்டுள்ளது.

அதற்குள் குறித்த நேரத்தில் கல்யாணம் முடிந்தது. அதன்பிறகே அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர், அப்போது மணப் பெண் தம்பியின் உடலைப் பார்த்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்திற்கு முக்கிய காரணம், விபத்து நடந்த இடம் ஒரு வழிப்பாதை, அதுமட்டுமின்றி 3 பேர் வந்துள்ளதால், பேலன்ஸ் தாங்க முடியாமல் விபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்