அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Report Print Kavitha in இந்தியா
419Shares

வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வருவதாகவும், இதனால் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3ந் திகதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்