அரேபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்திய போர் விமானம்! வீரர்களின் கதி என்ன?

Report Print Basu in இந்தியா
267Shares

அரபிக்கடலில் இந்தியன் மிக் -29கே போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 26ம் திகதி மாலை 5 மணிக்கு அரபிக்கடலில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான MiG-29K போர் விமானம் விபத்துக்குள்ளானதாக கேப்டன் டிகே சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

விபத்தை தொடர்ந்து விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான இரண்டாவது விமானியை தேடும் பணியில் தேடுதல் மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக கேப்டன் டிகே சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்