உயிரிழந்த மகன்! இளம் வயது மருமகளுக்கு 2-ஆம் திருமணம் செய்து தனது சொத்துக்களை கொடுத்த மாமனார்.. நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
965Shares

இந்தியாவில் மகன் உயிரிழந்த நிலையில் மருமகளுக்கு இரண்டாம் திருமணம் செய்துவைத்து தனது சொத்துக்களையும் கொடுத்த மாமனாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ரவி சங்கர் சோனி. இவர் மகன் சஞ்சய் மற்றும் மருமகள் சரிதா.

இந்த நிலையில் சஞ்சய் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

இளம் வயதில் விதவையான சரிதாவின் நிலையை கண்டு அவரின் மாமனார் ரவி சங்கர் மிகுந்த வேதனைப்பட்டார்.

இதையடுத்து ஒரு நெகிழ்ச்சியான அவர் முடிவுக்கு வந்தார். அதன்படி சரிதாவுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்து அவர் பெற்றோர் சம்மதத்துடன் மாப்பிள்ளை தேடினார்.

இதையடுத்து விபத்தில் தனது மனைவியை பறிகொடுத்த ராஜேஷ் சோனி என்பவருக்கு சரிதாவை இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இருவருக்கும் ரவி சங்கர் தலைமையில் திருமணம் நடந்தது.

மேலும் தனது மகன் ஸ்தானத்தில் உள்ள சரிதாவுக்கு கார், நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் வைப்புத்தொகையை ரவி சங்கர் கொடுத்து நெகிழ வைத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்