புயல் வெள்ளத்தில் தத்தளித்த தெரு நாய்கள்: வீட்டில் இடமளித்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா
140Shares

சென்னையில் நிவர் புயல் தாக்கத்துக்கு மத்தியிலும் தெரு நாய்களுக்கு இடமளித்து உணவளித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று நேற்று கரையை கடந்தது.

இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது, அரசும் பலவகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில், மழை காரணமாக தங்குமிடம் இல்லாமல் தெருவில், சாலையோரங்களில் இருந்த நாய்களுக்கு சென்னை மக்கள் தங்கள் வீடுகளில் இடமளித்துள்ளனர்.

திருவேற்காட்டில் வசிக்கும் விக்னேஷ் சுகுமார், தன் வீட்டின் அருகில் இரு மாதங்களுக்கு முன்பு 13 குட்டிகளை ஈன்ற நாய்க்கு வீட்டின் முன்வாசலில் இடமளித்துள்ளார்.

இதேபோன்று ஆவடியில் வசிக்கும் யோகா லட்சுமி தன்னுடைய வீட்டில் 3 நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், இதுபோன்ற பேரிடர் காலங்களில் விலங்குகளுக்கு பாதுகாப்பது அளிக்க வேண்டும்.

மரத்தின் அடியில் அவை தங்குவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம், வாயில்லா ஜீவன்களை பாதுகாப்பதும் நம் கடமையே என தெரிவித்துள்ளார்.

எம் மகேஷ் என்பவர் கூறுகையில், அவை தற்காலிகமாகவே தங்குகின்றன, நிரந்தரமாக அல்ல, நிலைமை சரியானதும் அவைகளே சென்றுவிடும், எனவே மழைக்காலங்களில் இடமளியுங்கள் என தெரிவித்துள்ளார்.

- Indian Express

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்