நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையால் மெரினா கடற்கரை மணல் பரப்பு முழுவதும் மழை நீர் தேங்கி இரட்டை கடல் போல் காட்சி அளிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது
நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று விடாது மழை பெய்து வந்தது. இதனால், சென்னை மெரினா கடற்கரையில் மணல் பரப்பு முழுவதும் மழை நீர் தேங்கி நின்று கடல் போல் காட்சி அளித்தது. அதே நேரத்தில், மெரினா கடல் பகுதியிலும் அலைகள் சீற்றமாக காணப்பட்டது.
மொத்தத்தில் இரட்டை கடல் போல் காட்சி அளித்த மெரினா கடற்கரையில் இளைஞர்கள் பலர் ஆபத்தை உணராமல் உற்சாக மிகுதியில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து விரட்டினர்.
மேலும், மெரினா கடற்கரையில் உள்ள அணுகு சாலைகள் முற்றிலும் அடைக்கப்பட்டதோடு, மெரினா காமராஜர் சாலையும் மூடப்பட்டன. அதையும் மீறி உள்ளே வந்த இளைஞர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள்.
மெரினா 😒😒😒🌪🌨#CycloneNivarUpdate #Valimai #Magi_Az pic.twitter.com/iq5669cxzj
— ▶𝑻𝒉𝒂𝒍𝒂 Ⓜ️αgєѕн 👑 (@Magi_offc) November 26, 2020