நிவர் புயல் தற்போது கரையை கடந்துள்ள நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் உருவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தமிழ்நாடு புதுச்சேரியை அச்சுறுத்திவந்த நிவர் புயல் நடு இரவில் முழுமையாக கரையைக் கடந்த நிலையில், அதன் தாக்கம், பாதிப்பு, விளைவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
காலை 6.15 மணி நிலவரப்படி, நிவர் புயல் தீவிர புயலாக வலுவிழந்து வட கடலோர தமிழகத்தில் புதுவைக்கு வட மேற்கு திசையில் 50 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து சாதாரண புயலாக அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாறும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மேலும், இந்த புதிய புயல் கடலூருக்கு தெற்கே டிசம்பர் 2ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நிவர் புயலின் வேகத்தை விட குறைந்த வேகத்திலேயே காற்று வீசம் என்பதால் பெரிதளவில் சேதம் இருக்காது என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.