அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும் நிவர் புயல்! வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டன

Report Print Kavitha in இந்தியா
108Shares

அதிக தீவரமாக உருவாக நிவர் புயல் இன்று காலை நிலவரப்படி புதுச்சேரிக்கு வடமேற்கில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிப்பதாகவும் இதனால் கடுமையான சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தீவிர புயலானது அடுத்த மூன்று மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கத்தால் கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்து, சென்னையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து, வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாலும், பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாலும், பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.

பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்காக அரசு உதவி எண்களை தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

மேலும் அதன்படி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சென்று தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்