திருமணமான முதலிரவில் பதட்டத்துடன் ஓடி வந்த உறவினர் கூறிய ஒரு தகவல்! அதிர்ச்சியில் உறைந்த புதுமணத்தம்பதி

Report Print Raju Raju in இந்தியா
2042Shares

இந்தியாவில் திருமணமான முதல் நாள் இரவில் புதிய கார் மற்றும் விலையுயர்ந்த நகைகள் மாயமானது புதுமணத்தம்பதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் குர்பன் அகமது. இவரது மகனுக்கும், இளம்பெண் ஒருவருக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த முதல் நாள் இரவின் போது மணமகனின் உறவினர் பதட்டத்துடன் ஓடி வந்து அனைவர் முன்னிலையிலும் அதிர்ச்சியான ஒரு விடயத்தை கூறினார்.

அதாவது மணப்பெண்ணுக்கு பரிசாக தரப்பட்ட நகைகள் மற்றும் புதிய கார் காணாமல் போனதாக கூற புதுமணத்தம்பதிகள் உள்ளிட்ட இரு வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக உடனடியாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

பொலிசார் கூறுகையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம், நகைகள் மற்றும் கார் மாயமான விடயம் தொடர்பில் எங்களுக்கு பலத்த சந்தேகம் உள்ளது. விசாரணை முடிவில் இதில் உள்ள மர்மம் வெளிவரும் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்