மனைவியை வேறொரு இளைஞருடன் பேச வைத்து கணவன், தம்பி செய்த செயல்! 30 வயது இளைஞனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா
3119Shares

தமிழகத்தில் பேஸ்புக் காதலியை பார்ப்பதற்கு, அவருக்கே தெரியாமல் வீட்டிற்கு சென்ற காதலனுக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

திருச்சியை சேர்ந்தவர் மருதுபாண்டியன். 30 வயதாகும் இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்.

குறிப்பாக பேஸ்புக்கில் ஏதேனும் பெண்களின் புகைப்படங்களைப் பார்த்தால், உடனே அந்த நபருக்கு நட்பு அழைப்பு விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன் படி சமீபத்தில் அனுசுயா என்ற பெண்ணிடம் பேஸ்புக்கில் மருதுபாண்டியன் பேசி பழகிவந்துள்ளார். அனுசுயாவும் நாட்கள் செல்ல, செல்ல தன்னுடைய போன் நம்பரைக் கொடுத்து, பேசி வந்துள்ளார்.

அதன் பின் காதல் வலைவீசுவது போன்று பேசியுள்ளார். இது காதல் தான் என்று நம்பிய மருதுபாண்டியன் அவர் கேட்கும் போது எல்லாம் சுமார் 3 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார்.

ஆனால், அவருக்கு காதலியான அனுசுயாவை எப்படியாவது பார்க்க வேண்டும்? அது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அவருக்கே தெரியாமல், சம்பவ தினத்தன்று அவருடைய முகவரிக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த வீட்டின் கதவை திறந்த பெண் தான் அனுசுயா, அவருக்கு 40 வயது இருக்கும் என்பதால், இதைக் கண்ட மருதுபாண்டி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஏனெனில் பேஸ்புக் புரோபைல் புகைப்படத்தில் இருந்த பெண் வேறு, இவர் வேறு என்பதால் கடும் குழப்பத்தில் இருந்துள்ளார்.

அதன் பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பொலிசார் இது குறித்து விசாரித்த போது, அந்த பெண்ணின் பெயர் அனுசுயா தான், ஆனால் பேஸ்புக்கில் இருந்த புகைப்படம் வேறொரு பெண்ணுடையது, அழகான பெண்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதன் பின் அதை இப்படி அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதற்கு எல்லாம் முக்கிய காரணம் அந்த பெண்ணின் கணவரும், தம்பியும் தான், அவர்கள் தான் இப்படி பேசி பணம் பறித்து வந்துள்ளனர்.

இதையடுத்து கணவன், தம்பி மற்றும் அனுசுயா மூவரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அந்த பேஸ்புக் புகைப்படத்தில் இருந்தது, பிரியா என்பவரின் புகைப்படமாம், அவர் தன்னுடைய புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு அவமானப்படுத்திவிட்டதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி மேட்டுதெருவை சேர்ந்தவர் சுகுமாரின் மகள் எனவும் அரசு கல்லூரியில் பிகாம் 2ம் வருடம் படித்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்