ஜீவனாம்சமாக கேட்டது ரூ.5 கோடி... மொத்த குடும்பத்தையும் கொன்று தள்ளிய மருமகள்: பகீர் கிளப்பும் சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா
446Shares

சென்னையின் சவுக்கார்பேட்டையில் குடும்ப உறுப்பினர்கள் மூவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததன் பின்னணியில் ஜீவனாம்சம் கோரியுள்ள வழக்கு என தெரிய வந்துள்ளது.

கணவரையும் அவரது பெற்றோரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது மருமகள் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவத்திற்கு பின்னர் மராட்டிய மாநிலம் புனேவுக்கு தப்பிய குற்றவாளிகளை கைது செய்யும் பொருட்டு, விசாரணை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

கொலை நடந்த குடியிருப்பு மற்றும் அக்கம்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகளில் இருந்தே பொலிசாருக்கு முக்கிய தகவல்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

பைனான்ஸ் தொழில் மேற்கொண்டு வந்த தலிசந்த்(74), மனைவி புஷ்பா பாய்(70) இவர்களது மகன் ஷீத்தல்(42) ஆகியோரையே புதன்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நிலையில் குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாவல் பகுதியை சேர்ந்த இவர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தின் சென்னை நகரில் குடியிருந்து வருகின்றனர்.

ஷீத்தலின் மனைவி ஜயமாலா கருத்துவேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.

ஷீத்தலும் ஜயமாலாவும் விவாகரத்து கோரி மனு அளித்துள்ளனர். மேலும் ஜீவனாம்சமாக தமக்கு 5 கோடி ரூபாய் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜயமாலா வைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இரு குடும்பத்தாருக்கும் முன்னரே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று பிரச்சனையை பேசி தீர்க்கும் பொருட்டு ஜயமாலாவும் இரு சகோதரர்கள் உட்பட ஐவர் ஷீத்தலின் குடியிருப்புக்கு சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பு கண்டறிந்துள்ளது.

வாக்குவாதம் எல்லை கடந்த நிலையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் முதலில் கணவரையும் பின்னர் மாமனார் மாமியாரையும் ஜயமாலா கொன்றதாக பொலிசார் கூறுகின்றனர்.

சைலன்ஸர் பொருத்தப்பட்ட துப்பாக்கி என்பதால், வெடிச்சத்தம் வெளியே கேட்கவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றனர்.

சம்பவத்திற்கு பின்னர், மிகவும் சாதாரணமாகவே இந்த ஐவர் கும்பல் குடியிருப்பில் இருந்து வெளியேறியதாக தெரிய வந்துள்ளது.

ஜயமாலாவும் இரு சகோதரர்களிம் சாலை மார்க்கம் சென்னையில் இருந்து தப்பியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்