வெளிநாட்டில் வசித்த கணவரின் அண்ணன்! கணவருடனான அண்ணி தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. திருமணமான 2 மாதத்தில் பகீர் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
2697Shares

தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

சிவகங்கையை சேர்ந்தவர் கவுசல்யா (19). இவருக்கும் பாக்யராஜ் (32) என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

செப்டம்பர் 30-ஆம் திகதி கணவன் வெளியூர் சென்றிருந்த நிலையில், கௌசல்யா தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கௌசல்யாவின் கை கால்களில் காயங்கள் இருந்தன. வீட்டின் சுவர்களில் ரத்தக் கறைகள் காணப்பட்டன.

கௌசல்யாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த வழக்கில் கடந்த ஒன்றரை மாதம் நடந்த பொலிசார் விசாரணையின் இறுதியாக, கெளசல்யாவின் கணவன் பாக்கியராஜும் அவரது அண்ணி ஜோதியும் கைதாகியுள்ளனர்.

பாக்கியராஜின் அண்ணன் குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அதனால் அவரது மனைவி ஜோதி, தனது குழந்தைகளுடன் கணவன் வீட்டில் வசித்து வருகிறார். அதே வீட்டில் தான், பாக்கியராஜும் கெளசல்யாவும் தங்கள் புதுக்குடித்தனத்தை தொடர்ந்துள்ளனர்.

அப்போது ஒருநாள், பாக்கியராஜும் அவரது அண்ணி ஜோதியும் தவறாணா நிலையில் இருந்ததைப் பார்த்து கெளசல்யா அதிர்ச்சியடைந்துள்ளார். கணவனிடம் இதுகுறித்து கேட்டபோது, திருமணத்திற்கு முன்பே தனக்கும் தனது அண்ணிக்கும் உறவு இருந்ததாகவும் இனி அதைக் கைவிட முடியாது எனவும் கூறியுள்ளார்.இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறுகள் நடந்துள்ளன.

கணவனின் தகாத உறவால் ஏற்பட்ட மன உளைச்சல், அவரது வரதட்சணைக் கொடுமையால் ஏற்பட்ட நெருக்கடி ஆகியவற்றைத் தாங்க முடியாத கெளசல்யா தற்கொலை முடிவை நாடியுள்ளார். சம்பவத்தன்று கத்தியால் கைகளை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போதும் அவரது உயிர் போகாததால், மின்விசிறியில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக பாக்கியராஜ் மற்றும் ஜோதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்